அசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய பா.ரஞ்சித்

0

பா.ரஞ்சித் அசுரன் படத்தை புகழந்து தள்ளி ட்வீட் செய்துள்ளார்

அசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய பா.ரஞ்சித்
எழுத்தாளர் பூமணி எழுதிய ’வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கி உள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அசுரன் படத்தை அரசியல் தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் சென்று பார்த்துள்ளனர். பார்த்தது மட்டுமின்றி சில பேர் வெற்றிமாறனை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சமி நிலம் மீட்பு, நில உரிமை போன்றவற்றைத் தெளிவாகக் காண்பித்துள்ள வெற்றிமாறனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்த்திரையில் #அசுரன்’ கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் @VetriMaaran தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் @dhanushkraja நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி @theVcreations மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!!17K11:00 PM – Oct 8, 2019Twitter Ads info and privacy3,069 people are talking about this
இந்த நிலையில் அசுரன் படம் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் தனது பாணியில் வாழ்த்துக் கூறி ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘தமிழ்த் திரையில் அசுரன்கள் கதையை நிகழ்த்திக் காட்டிய இயக்குநர் வெற்றிமாறன், தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் தனுஷ், நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தானு மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மன மகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!!’ என்று பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தானு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து மஞ்சுவாரியர், அம்மு அபிராமி, கென், டீஜே, பசுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.