கோத்தபாய என்ற கொலைகாரனை தோற்கடிப்போம்!

0

முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி என்றும் தம்மை அடையாளப்படுத்தி கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்தவர்கள் இனப்படுகொலையாளியும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளனர். 

இந்த செயற்பாடுகளின் மூலம் முன்னாள் போராளிகள் கட்சி எனது ஜனநாயக கட்சி என்ற கட்சியின் முகத்திரை கிழிந்ள்ளது. இவர்கள் கடந்த காலத்தில் தேர்தல் தேர்தலில் நின்றபோது தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள். அவர்களை மக்கள் ஏன் நிராகரித்தார்கள் என்பதின் அர்த்தம் இப்போது வெளிப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் முதன்மையானவர் கோத்தபாய ராஜபக்ச. இவர் இலங்கையின் ஜனாதிபதியாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலின்போது தோற்கடிக்கப்பட்டார். ஈழத்தமிழ் மக்களின் வாக்குகளினால் இவர் தோற்கடிக்கப்பட்டார். எனினும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அதிகாரமும் அடங்கவில்லை. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசியல் சூழ்ச்சியால் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்று மீண்டும் ராஜபக்ஷ தோல்வியை தழுவினார்.

2009இல் மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி, ஈழத்தமிழ் மக்களை அழித்து தமிழீழ விடுதலைப் புலிகளை மௌனிக்கச் செய்ததன் மூலம் பெற்றுக்கொண்ட வெற்றியை பயன்படுத்தி தொடர்ந்தும் பன்னெடுங் காலம் ஆட்சியில் வீற்றிருக்க மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டார். இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச சிங்கள மக்களாலேயே தூக்கி எறிகிற காலமாக 2015 அமைந்தது.

தற்போது அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தலில் இறங்கியுள்ளார். கோத்தபாய ராஜபக்சே இலங்கையின் அதிபராக மாறினால் இலங்கை சுடுகாடாக மாறும். இனப்படுகொலைகளும் காணாமல் போதல்களும் மீண்டும் அரங்கேறும்.

இந்த நிலையில் இன்றைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் மேடையில் பேசுகின்றபோது கொலைகார கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சி மீண்டும் தேவை எனில் அவருக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். எனினும் கடந்த காலத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ஸ மஹிந்த ராஜபக்ஸ செய்த இனப்படுகொலை குற்றத்தில் இருந்து, அவர்களை சர்வதேச அரங்கில் பாதுகாக்கும் வேலைகளில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டார்.

தற்போது கொலைகாரர்கள் கோத்தபாய ராஜபக்ச என்று கூறும் ஈழத்தமிழ் மக்களை அவர்கள் கொலை செய்தார்கள் என்பதை மாத்திரம் கூறாமல் திருட்டு அரசியல் செய்கின்றனர். அப்படிப் பார்க்கையில் சஜித் – ரணில் தரப்பும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாகவும் தந்திரோபாயமாக காய்களை நகர்த்தி கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

எனினும் கொலைகார கோத்தபாய ராஜபக்சவை ஈழத்தமிழர்கள் மறக்க மாட்டார்கள். சிறுவன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட்டை கொடுத்து படுகொலை செய்தவர்கள் இவர்கள். இசைப்பிரியா என்ற பெண் போராளியை பெரும் வன்முறை புரிந்து கொண்டவர்கள் இவர்கள். இவர்களின் இனப்படுகொலையை ஈழத் தமிழினம் ஒருபோதும் மறவாது. தடங்கள் அழியாது.

எனவே கொலைகார கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிக்க முடிவையே ஈழத்தமிழ் மக்கள் கைக்கொள்ள வேண்டும். கோத்தபாய ராஜபக்ச மீண்டும் ஒரு அரசியல் தோல்வியை தழுவுவது, ராஜபக்ச குடும்பத்திற்கு பேரிடியாக அமையும். கோத்தபாய ராஜபக்ஷ ஆட்சி பொறுப்பேற்றால் அது இருண்ட யுகமாக அமையும்.

ஆசிரியர், ஈழம்நியூஸ். 12.10.2019

Leave A Reply

Your email address will not be published.