கோத்தாபயவின் மேடையில் கிரிக்கெட் வீரர் தில்சான்!

0

2015 இல் செய்த தவறுகளை மக்கள மீண்டும் செய்யக்கூடாது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்சான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபயவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2015 இல் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாததால் மக்கள் ஏமாற்றப்பட்டனர் என தில்சான் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச இராணுவத்தில் இணைந்தவேளை எப்படி இந்த நாட்டை நேசித்தாரோ அதுபோலவே இன்றும் நாட்டை நேசிக்கின்றார் என தில்சான் தெரிவித்துள்ளார்.

நாட்டையும் எதிர்கால தலைமுறையையும் பாதுகாப்பதற்காக நாட்டை கோத்தாபயரஜபக்சவிடம் கையளிக்கவேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.