சஜித்தின் முதலாவது பரப்புரைக் கூட்டம் ஆரம்பம் – இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

0

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்த கூட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித்தின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம்: காலிமுகத்திடலில் மக்கள் திரள்!

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

3 இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் இந்த பேரணில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 100 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் நாடளாவிய ரீதியில் அழைத்து வரப்பட்ட பெருந்திரளான மக்கள் காலி முகத்திடலில் திரண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த பகுதியின் ஊடக செல்லும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.