சிறுபான்மை இனத்தவரிடம் ரணில் உருக்கமான கோரிக்கை!

0

பாராளுமன்றத்தில் சிறுபான்மையாக இருந்து கொண்டு முன்னெடுத்த சீர்திருத்தங்களை பல மடங்காக்க ஆணை வழங்குங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த ஐந்து வருடங்களில் நடத்திய வெளிப்படையான ஆட்சியின் மூலம் செயற்படுத்தப்பட்ட சீர்திருத்த செயன்முறையை முன்கொண்டு செல்ல, ஜனாதிபதி தேர்தலிலும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும்  ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அவ்வாறு வழங்கினால் அரசியல் யாப்பு உருவாக்கம் உள்ளிட்டவற்றில் சீர்த்திருத்தம் மேற்கொண்டு இலங்கையை ஆசியாவில் உயரிய இடத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறினார்.  

Leave A Reply

Your email address will not be published.