பயத்திலேயே வாழ்ந்து வருவதாக நயன்தாரா பேட்டி

0

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தான் பயத்திலேயே வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.

அவர் நடிக்கும் படத்தில் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ளமாட்டார்.

இந்நிலையில் தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு, பிரபல ஆங்கில இதழான ‘வோக்’ இதழுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவிக்கையில் ”வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்” என கூறியுள்ளார்.

சமீபத்தில் இவரை பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதுவே, அவர் வெளியிட்ட கடைசி அறிக்கையாகும். தன்னை பற்றி எந்தவொரு செய்திக்கும் அவர் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமுமே தெரிவிக்கப்படாது என்பது  குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தென்னிந்திய கதாநாயகிகளில் இவரது ஒளிப்படம் மற்றும் பேட்டிதான் முதன் முதலில் ‘வோக்’ இதழில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.