மருத்துவ துறைக்கான நோபல் பரிசுக்கு 3 ஆராய்ச்சியாளர்கள் தெரிவு!

0

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் ஜி,கெலின், சர் பீட்டர் ரேட்கிளிஃப் , கிரேக் எல். செமன்ஸா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடல் கிடைக்கும் ஆக்ஸிஜனின் அளவை பொறுத்து செல்களை எவ்வாறு தகவமைத்து கொள்கிறது என்பதை கண்டுபிடித்ததற்காக இந்த 3 மருத்துவர்களுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.