வெறித்தனம் பாடலுக்கு மாஸாக நடனமாடி அசத்திய சாண்டி!

0

வெறித்தனம் பாடலுக்கு மாஸாக நடனமாடி அசத்திய சாண்டி!
பிக் பாஸ் மூன்றாவது சீசன்னில் கலந்து கொண்ட சாண்டி, போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

எந்த நேரமும் ஹவுஸ் மேட்ஸிடம் கலாட்டா செய்து கொண்டு பிக் பாஸ் வீட்டையே தனது பேச்சு திறமையால் கலகலப்பாக வைத்துக் கொண்டார். இவரது நகைச்சுவை தன்மை பிக் பாஸ்-க்கு மிகவும் பிடித்திருந்ததால் அவரை மிஸ் செய்யப் போவதாக நிகழ்ச்சி முடிவுயடையும் நாள் அன்று தெரிவித்தார். அது மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களை விட குறைவாகவே எலிமினேஷன் பட்டியலில் இடம் பெற்றார். மக்கள் மனதில் இடம் பிடித்த சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றுள்ளார்.

இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த சாண்டி தனக்கு நெருக்கமானவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது சாண்டி, பிகில் படத்தில் விஜய் அவரது குரலில் பாடியுள்ள ‘வெறித்தனம்’ பாடலுக்குத் தனது டான்ஸ் ஸ்டூடியோ மாணவர்கள்,தனது மகள் லாலா மற்றும் மச்சினிச்சியுடன் இணைந்து நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சாண்டி,‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக இதே பாடலை கமல்ஹாசன் முன்பு முகென் பட மேடையில் சாண்டி நடனமாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.