ஆசிரியர் பக்கம்: தீபாவளிகளும் தமிழர்களின் தீராத வலிகளும்!

0

ஒவ்வொரு தீபாவளியும் தமிழர்களுக்கு தீராத வலிகளை தருகின்ற நாள்களாக கடந்து செல்கின்றன. உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இன்றைய தினம் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகின்ற போதும் இன்றும் ஈழத்தின் வீடுகள் பலவற்றில் இருள் சூழ்ந்த நிலையே காணப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழர்களைப் பொறுத்தவரையில் தீபாவளிகள் தீராத வலி தருகின்ற நாட்களாகவே நகர்ந்து செல்கின்றன. நிலத்தை இழந்தவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கண்ணீரும் ஈழ நிலத்தை தொடர்ந்தும் துயரத்தில் நினைத்து வருகின்றது. 

இந்தச் சூழ்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது அந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கூறியிருந்தார்.

அதன் பிறகு அடுத்து வரக்கூடிய தீபாவளிகளில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என சம்பந்தன் கூறினார் 2017 ஆம் ஆண்டு 2018 ஆம் ஆண்டு தீபாவளின்போதும் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை சம்பந்தன் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தீபாவளியை இன்றைய தினம் இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு தொடங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி தற்போது முடிவுக்கு வரும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

எனினும் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறிய சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கு உள்ளக விசாரணை மூலம் போர்க்குற்றங்களுக்கு தீர்ப்பு வழங்குவதாகவும் சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்தது. அத்துடன் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கிய தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவோம் என்றும் இலங்கை அரசாங்கம் கூறி வந்தது

தற்போது அவை தொடர்பாக எந்தவிதமான பேச்சும் இலங்கை அரசியலில் காணப்படவில்லை. தொடர்ந்து சிங்களப் பேரினவாத இருப்புக்கான அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஏமாற்றங்கள் மிகுந்த தீபாவளியாக இன்றைய தீபாவளி காணப்படுகின்றன. அதாவது தமிழர்களின் ஆதரவைப் பெற்று தமிழர்களை சிங்கள அரசு ஏமாற்றியுள்ளது. தன்னை காப்பாற்றியுள்ளது.

எனினும் தமிழர்கள் இவ்வாறு இருள் சூழ்ந்த நிலையிலும் துயரங்களின் மத்தியிலும் வாழ்ந்துவிட முடியாது. எதிர்காலத்தில் இந்த சூழ்நிலைகள் நீக்கப்படவேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி என்பதிலும் கிடைக்கவேண்டும்.

நிலத்தை இழந்த மக்கள் நிலங்களுக்கு திரும்ப வேண்டும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு உரிய தீர்வினை முன் வைக்க வேண்டும் இலங்கை அரசாங்கம் இலங்கை அரசபடைகள் இழைத்த இனப்படுகொலைக்கான தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

எனவே அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இவையெல்லாம் நிறைவேற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பது தவிர, தமிழர்களிடம் வேறு எந்த தீர்வும் வழியும் இல்லை. தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் சோரம் போனவர்களாக மக்களை ஏமாற்றுகின்ற – இலங்கை அரசாங்கத்துக்கு உடந்தையாக ஆதரவாகவும் அவர்கள் தாங்களாகவே காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் தந்தை செல்வா கூறியது போல தமிழர்களை கடவுளைக் காப்பாற்ற வேண்டும். இனிய தீபாவளி நாளிலும் தமிழர்களின் இன்னல்கள் நீங்கி அவர்களின் துயரங்கள் நீங்கி அவர்களைச் சூழ்ந்துள்ள இருள் நீங்கி புதியதொரு வாழ்க்கைக்கு தமிழ் மக்கள் செல்ல வேண்டும்.

ஈழ மக்கள், உரிமையும் முடிவும் கூடியவாறு ஒன்று கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

ஆசிரியர், ஈழம்நியூஸ். 27.10.2019

Leave A Reply

Your email address will not be published.