தமிழர்களின் ரத்த வாடையை முகர்ந்து பார்க்கிறீர்களா அடிமைகளே?

0

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த ஆண்டுடன் இனப்படுகொலை நடைபெற்ற பத்து ஆண்டுகளாகின்றன. இந்தச் சூழ்நிலையில் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். 

ஈழம் இனப்படுகொலை என்பது மாறாத நிலமாகக் காணப்படுகிறது இன்றும் போரில் உறவுகளை இழந்தவர்கள் துயரத்தோடு புலம்பித் திரிகிறார்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வெய்யிலிலும் மழையிலும் வீதியிலிருந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இனப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கும் ஒரு தீர்வு வேண்டும் என்று எங்கள் மக்கள் போராடுகிறார்கள் இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் நீதியை முன்வைக்க வேண்டும் என்ற ஒரு போராட்டம் தங்கள் மண்ணில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் கோத்தபாய ராஜபக்ச என்ற கொலைகாரனுக்கு வடக்கு கிழக்கில் தேர்தல் பிரச்சாரத்தில் சில இளைஞர்கள் ஈடுபடுவதைக் காண முடிகிறது இளைஞர்கள் என்ற போர்வையில் சில கழிசடைகள் இவ்வாறு செய்கின்றனர். 

தமது சொந்த நலன்களுக்காக தமது அற்ப நலன்களுக்காக இவர்கள் கோத்தபாயவுக்கு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளுகின்றனர். மனசாட்சியுள்ள எந்த மனிதர்களும் செய்யமுடியாத இந்த அராஜகத்தை ஈன செயலை பாவச் செயலை இந்த இளைஞர்கள் செய்கின்றனர்.

இந்தநிலையில் அண்மையில் ஒரு புகைப்படம் சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தன அதில் சில தமிழ்பெண்கள் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆளாகி இருப்பதை காணக்கூடியதாக இருந்தது. அதேபோன்று மற்றுமொரு புகைப்படத்தில் கோத்தபாயவின் கைகளை முத்தமிடுகின்றனர் இளைஞர்களை காண முடிந்தது.

கொத்துக் கொத்தாக ஈழத் தமிழ் மக்களை கொலை செய்த கோத்தபாயவின் கைகளில் இரத்தவாடை இன்னமும் வீசுகிறதா என்பதையா முகர்ந்து பார்க்கிறீர்கள் அடிமைகளே? நாளை உங்களது இரத்தம், அல்லது உங்கள் சகோதரிகளின் இரத்தமும் கோத்தாவின் கைகளில் வாடைய அடிக்கக்கூடும். அப்போதும் முகர்ந்து பாருங்கள்.

உங்களுக்காக எமது தலைவர் போராடினார். உங்களுக்காக 45 ஆயிரம் மாவீரர்கள் தங்கள் உயிர்களை இந்த மண்ணில் ஆகுதி ஆக்கினார்கள். உங்களுக்காக பல்லாயிரம் போராளிகள் எங்கள் மண்ணில் போராடினார்கள். இன்றும் வாழ்வையே போராட்டம் ஆக்கி இந்த மண்ணில் தவம் இருப்போரை நீங்கள் அவமதித்துள்ளீர்கள்.

கோத்தபாய என்ற கொலைகாரன் ஆட்சி பீடம் ஏறினால் உங்கள் கழுத்தும் நெறிக்கப்படும். உங்கள் குருதியும் சிந்தப்படும். ஆனாலும் எங்கள் ஈழ மக்கள் கோத்தபாயவை தேற்கடிப்பார்கள். அந்த தோல்வியின்போது முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பீர்கள்? உங்கள் ஒரு சிலரால் ஒட்டுமொத்த ஈழ மண்ணுக்கும் அசிங்கம்.

வீரர்களும் உன்னத தியாகிகளும் பெரும் தலைவனும் பிறந்த இம் மண்ணில் காலம் காலமாக அடிமைகளும் துரோகிகளும் களையாக தொடர்ந்தே வருகின்றனர். ஆனாலும் அதையெல்லாம் தாண்டியே எங்கள் போராட்டம் வீறு நடை போட்டது. நீங்கள் அற்ப அரசியலில் காணாமல் போவீர்கள். இது பொருட்படுத்தக்க தக்கல்ல.

எமது இனத்திற்கு கோத்தபாய இழைத்த பெருங்கொடுமைக்கு, பெரும் அநீதிக்கு பதில் சொல்ல வேண்டும். தண்டனை அனுபவிக்க வேண்டும். அதற்கான காலம் வரும். உன்னதமும் தியாகமும் நிறைந்த எங்கள் ஈழவிடுதலைப் போராட்டம் வீண் போகாது. தோற்காது. ஈழம் தலை நிமிரும்.

ஆசிரியர், ஈழம்நியூஸ். 19-10-2019

Leave A Reply

Your email address will not be published.