கண்ணாடி போத்தல்களை கொண்டு வீடு கட்டிய பிரேசில் பெண்!

0

பிரேசிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரை சேர்ந்த பெண் இவோன் மார்டின். விவசாயி. இவர் கணவரிடம் இருந்து பிரிந்து, கைக்குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், அண்மையில் அவரது குழந்தை உடல் நலக்குறைவால் இறந்தது.

இதனால் இவோன் மார்டின் கடும் மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளானார். இதில் இருந்து விடுபட அவர் வழியை தேடினார். அப்போதுதான் சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி பாட்டில்கள் குவிந்து கிடப்பதை கண்டார். அவற்றை பயன்படுத்தி வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார்.

அதன்படி 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு 3 மீட்டர் உயரம், 9 மீட்டர் அகலம் மற்றும் 8 மீட்டர் நீளம் கொண்ட அழகான வீட்டை கட்டி முடித்தார்.

வீட்டினுள் உள்ள படுக்கையறை, சமையலறை, கழிவறை என அனைத்துமே கண்ணாடி பாட்டில்களால் கட்டப்பட்டு உள்ளன. இந்த பாட்டில் வீடு கட்டுமான செலவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும் என இவோன் மார்ட்டின் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.