ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் மூவாயிரத்தைத் தாண்டியது!

0

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் சம்பந்தமாக சுமார் 3,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பாக, நேற்று (06) பிற்பகல் 4.00 மணி வரை பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,983 ஆக அதிகரித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று (06) பிற்பகல் 4.00 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலத்தில் 116 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டத்தை மீறியமை தொடர்பாக 113 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.

தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு மத்திய நிலையத்திற்கு 29 முறைப்பாடுகளும், மாவட்ட ரீதியிலான தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணை நிலையங்களுக்கு 87 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

வேட்புமனுத் தாக்கலையடுத்து கடந்த 8 ஆம் திகதி முதல் 6 வரையான காலப்பகுதியில் மொத்தமாக 2.983 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதில், சட்டத்தை மீறியமை தொடர்பில் 2.861 முறைப்பாடுகளும், வன்முறைகள் தொடர்பில் 25 முறைப்பாடுகளும், வேறு வகையிலான 97 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.