தற்போதைய அரசு தொடர்பில் நாளை இறுதி முடிவு!

0

அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் நாளை (20) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்ல வேண்டும் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எது எப்படிப் போனாலும், நாளை புதன்கிழமை ஜனாதிபதியுடன் பேசி இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.