திடீர்னு மனம் மாறிய விஜய்: காரணம் ‘அந்த’ பெரும் புள்ளியோ?

0

விஜய் தேவரகொண்டா தனது திரையுலக பயணம் மற்றும் திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். அவரின் திட்டம் மாறியுள்ளது பற்றி தான் அனைவரும் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்யின் திரைப்பயணம்

விஜய் தேவரகொண்டா ரூ. 15 கோடிக்கு பங்களா வாங்கியது பற்றி தான் பேச்சாக உள்ளது. இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் பற்றி தெரிவித்துள்ளார். நான் கல்லூரியில் படித்தபோது நாடகங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. அது எனக்கு உற்சாகத்தை அளித்தது. எனக்கு அதிகாலையில் எழுவது பிடிக்கவே பிடிக்காது. ஆனால் நடிப்பதற்காக சீக்கிரமே எழ எனக்கு பிரச்சனை இல்லை. அப்பொழுது தான் சினிமா மீதான ஈர்ப்பை உணர்ந்தேன் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

கவலை இல்லை, ஆனால் இருக்கு

மக்களுக்கு என் படம் பிடிக்காவிட்டால் அதற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புவேன். ஒரு முறை ஒரு சிறுமி என்னிடம் வந்து உங்களின் டியர் காம்ரேட் படத்தின் முதல் பாதி பிடித்தது ஆனால் இரண்டாம் பாதி பிடிக்கவில்லை என்றார். எனக்கு அவரின் விமர்சனம் பிடித்தது. ஆசைப்பட்டதை எல்லாம் செய்ய வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். நான் மக்கள் பேசுவதை பற்றி கவலைப்படுவது இல்லை. ஆனால் சில சயமயம் அது பாக்ஸ் ஆபீஸ் பற்றியதாகிவிடுகிறது என்றார் விஜய்.

காதல் படங்கள்

விஜய் தேவரகொண்டா நல்ல படங்களை தான் கொடுக்கிறார் என்று நினைக்கிறேன். என் படம் ஏதாவது சரியாக போகவில்லை என்றால் பரவாயில்லை அடுத்த படத்தில் காட்டுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். என் வயது காரணமாக நான் நிறைய ரொமான்டிக் படங்களில் நடிக்கிறேன். திரையுலகில் உள்ள இளம் நடிகர்களில் நானும் ஒருவன். நான் காதல் கதைகளில் நடிக்காவிட்டால் யார் நடிப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார் விஜய்.

பாலிவுட் செல்லும் விஜய்

நான் அழாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். ஆனால் அது பற்றி நான் அதிகம் யோசிப்பது இல்லை. செல்போன் கேமராவில் வயது தெரிகிறது. அது எனக்கு பிடிக்கவில்லை. நான் விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளேன் என்றார் விஜய். பாலிவுட் வேண்டாம் என்று இருந்த விஜய் தற்போது மனம் மாறியதற்கு பின்னால் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தான் இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. அண்மையில் கரண் அளித்த பார்ட்டியில் கூட விஜய் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.