துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்க விளக்கம்!

0

கினிகத்தேன பொலிஸ் பிரிவில் பொல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தான் வருத்தமடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (06) 7.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்த குழுவினர் மீது அவரின் பாதுகாப்பிற்கு இருந்த அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர்.

அதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட கான்ஸ்டபிள்கள் இருவரும் கினிகத்தேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இருவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் மஜிஸ்ட்ரேட் நீதிபதியுமான ஜே.ஸ்ட்ரொக்ஸி உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், காயமடைந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில் இல்லை என தெரிவித்த எஸ்.பீ.திஸாநாயக்க குறித்த சந்தர்ப்பத்தில் அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.