பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் இருவர் பெல்ஜியத்தில் கைது

0

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் இருவர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்,

மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ற்ரில் பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவர்கள் இருவரும் பெல்ஜியத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியத் தொழிலதிபரைக் கொலை செய்ததற்காக குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஜீன்-குளாட் லாகோற் (Jean-Claude Lacote) மற்றும் அவரது மனைவி ஹில்ட் ஃபன் ஏக்கர் (Hilde van Acker) ஆகியோர் 1996 இல் மார்கஸ் மிச்செலை (Marcus Mitchell) சுட்டுக் கொன்றனர்.

சர்ரே நகரைச் சேர்ந்த தொழிலதிபர் மார்கஸ் மிச்செல் பெல்ஜிய கடலோர நகரமான டி ஹானில் (De Haan) 1996 மே 23 அன்று ஒரு காட்டுப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

56 வயதான ஹில்ட் ஃபன் ஏக்கர் ஐரோப்பிய ஒன்றிய குற்றவியல் அமைப்பான யூரோபோலின் மிகவும் வேண்டப்பட்ட பெண் குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.