ஈழ விடுதலை போராட்டத்தின் மூத்த உறுப்பினர் அருளர் காலமானார்!

0

ஈழ விடுதலை போராட்டத்தை வழிநடத்திய ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினரும், ஈழ விடுதலை இயக்கங்களின் மூத்த உறுப்பினருமாகிய அருளர் காலமானார்

ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) ஈழ இயக்க போராளிக்குகாக ஒழுங்கு படுத்தப்பட்ட முதலாவது ஆயுதப் பயிற்சி சிறப்பு முகாமில் பயிற்சி பெற்றவரும், 1983 நடந்த யூலை இனவழிப்பு கலவரத்தை வரலாற்று பதிவாக்கியவரும் “லங்கா ராணி” என்ற நூலின் ஆசிரியருமான தோழர் அருளர் யாழ்ப்பாணத்தில் இன்று(03.12.2019) காலமானார்.

ஈழ மக்கள் தொடர்பாக மிகவும் ஆக்கபூர்வமான அரசியல் முன்னகர்வினை ஏற்படுத்தி பல இயக்கங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த அர்ப்பணித்து செயல்பட்டவர். இறக்கும் தருணம்வரை ஈரோஸ் அமைப்பின் வெகுசன அமைப்பாகிய ஈழவர் ஜனநாயக முன்னணியின் (EDF) செயலாளர் நாயகமாக இருந்தார்.

ஈழத்தில் அழிக்கப்பட்ட தமிழர்களின் கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் பற்பல சிரமங்களுக்கு மத்தியிலும் சென்று மிகவும் காத்திரமான வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டு அதனை நூலுருவில் கொண்டு வந்தார். இன்றும் ஈழத் தமிழரின் வரலாறு மறைக்கப்படுகிறது நிலையில் காத்திரமான பதிப்பாக “Missing Home Land in Sri Lanka” என்ற நூல் மூலம் உலக தமிழர்களிற்கு ஈழ வரலாற்றின் வரலாற்று சான்றாக அவர் திகழ்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.