ஐ.தே.கட்சி குறித்து பிரதமர் மஹிந்த விசனம்

0

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் தொடர்பில் சரியான தகவல் வெளியானதன் பின்னர், அதனுடன் தொடர்புடைய சதிகாரர்கள் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் அரசியலிலிருந்து விடைபெற வேண்டி வரும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (06) சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ களமிறங்கியது முதலும், அவர் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு சதிகளை முன்னெடுத்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் செயற்படுவதற்கு பிரதான காரணம், கடந்த அரசாங்கத்துக்கு செய்ய முடியாமல் போன பாரிய வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் வந்தது முதல் செய்வதற்கு ஆரம்பித்துள்ளதனாலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததன் பின்னர், அக்கட்சிக்குள் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. உடைந்து போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவது சாத்தியமில்லாது போயுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் உள்ள பெரும்பாலானவர்கள் எம்முடன் கைகோர்க்க தயாராகிக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.