கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரியை அழைத்துச் செல்ல நடவடிக்கை?

0

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக காரியாலய அதிகாரி ஜீ. பிரன்சிஸ் உட்பட அவரது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல நோயாளர்களை அழைத்துச் செல்லும் சுவிஸ்  நாட்டின் விசேட விமானமொன்று சூரிச் விமான நிலையத்தில் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

அந்த விமான நிலையத்தினுடாக கிடைக்கப் பெற்ற தகவல்களை மேற்கோள்காட்டி இதனை சகோதர ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய சுமார் பத்தரை மணி நேரம் தேவைப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த கடத்தப்பட்ட அதிகாரியை சுவிஸ் நாட்டுக்கு அனுப்புமாறு அந்நாட்டின் இராஜாங்க செயலாளர் மேரிஸ் கொழும்பு தூதரகத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

இருப்பினும், குறித்த சுவிஸ் விமானத்துக்கு விமான நிலையத்துக்கு பிரவேசிக்க சிவில் விமான சேவை அதிகாரிகள் இதுவரையில் அனுமதி கொடுக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜீ.பிரான்சிஸ் அதிகாரிக்கு இந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு டிசம்பர் 9 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.