சந்தர்ப்பம் அமையும் போது 19 ஆம் திருத்தச் சட்டத்தை உடன் நீக்குவேன்- ஜனாதிபதி பேட்டி

0

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற்றால் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

(30) வெளியான “த ஹிந்து” பத்திரிகைக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் நிறைவேற்றிய இந்த 19 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாகவே தோல்வியான ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை நிருவகிக்க வேண்டுமானால் உறுதித் தன்மை அவசியமாகும். கடந்த காலத்தில் சிறிசேன- ரணில் அரசாங்கத்தில் உறுதித் தன்மை இருக்கவில்லை. இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி முறுகல் நிலைமை தோன்றியது. இவ்வாறு முறுகல் நிலைமைக்கு மத்தியில் நாட்டைக் கொண்டு செல்வது எவ்வாறு? இந்த நிலைமை நீடிக்கும் போது, நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதில்லை எனவும் ஜனாதிபதி தனது நீண்ட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.   

Leave A Reply

Your email address will not be published.