சிரஞ்சீவிக்கு நோ சொன்ன அனுஷ்கா!

0

சரித்திர பின்னணியிலான படம் என்றால் இயக்குநர்களின் தேர்வு அனுஷ்காவாக தான் இருக்கும். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்திருந்தார். அதிகமான சரித்திர பட வாய்ப்புகள் வருவதால் தற்போதைக்கு அதனை ஒதுக்கி வைப்பது என முடிவு செய்துள்ளாராம்.

தனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.  அந்த வகையில் நிசப்தம் படத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிரஞ்சீவி நடிக்கும் கமர்ஷியல் படமொன்றில் நடிக்க படக்குழு அனுஷ்காவை அணுகியுள்ளது. ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

அதேசமயம் கவுதம் மேனன் இயக்க உள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகவிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.