ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

0

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2019 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வுகள் அனைத்தும் நேற்று (02) நள்ளிரவுடன் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதன்படி, இலங்கை பாராளுமன்றம் எதிர்வரும் ஜனவரி 03 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளதாகவும் குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 (1)ஆவது உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.