முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மீட்டர் அவசியம்

0

பொது மக்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகள் அனைத்திலும் கட்டண மீற்றரை பொருத்துவது கட்டாயமாகும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும், அது உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலிலேயே குறித்த சட்டத்தை கட்டாயம் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை முன்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை மேலும் குறிப்பிட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.