மைத்திரியின் இல்லம் பறிபோகும் அறிகுறி!

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது வசிக்கும் கொழும்பிலுள்ள சொகுசு வீடு அவரிடமிருந்து மீளப்பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

உரிய வகையில் அமைச்சரவையில் அனுமதி பெறாமல் அவர் குறித்த இல்லத்தை தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாக அரச உயர்மட்டம் கருதுவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரும் கொழும்பு பெஜட் வீதியிலுள்ள இல்லத்தை பயன்படுத்தும் எண்ணத்தில் அதற்கான அனுமதியை தன் ஆட்சி காலத்திலேயே அமைச்சரவையில் பெற்றுக்கொண்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அவரிடம் இருந்து குறித்த இல்லத்தை மீளப் பெறும் தீர்மானத்தில் அரச உயர்மட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.