யாழில் பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது!

0

யாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர், காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று (வியாழக்கிழமை) அவரை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1 லட்சம் ரூபாய் மற்றும் 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலும் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.