ரணில் – சஜித் அடுத்த வாரத்துக்குள் கலந்துரையாட முஸ்தீபு

0

எதிர்க் கட்சித் தலைமைப் பதவி தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி  பொருத்தமான தீர்மானம் ஒன்றுக்கு வருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அக்கட்சியின் உள்ளக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பில் சஜித் பிரேமதாச எம்.பி.யுடன் எந்தவொரு நேரத்திலும் கலந்துரையாடுவதற்கு தான் தயாராகவுள்ளதாக ஐ.தே. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசவுக்கு நெருங்கிய எம்.பி. ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.

எதிர்வரும் பொதுத் தேர்தலைப் போன்று, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் காத்திரமான தீரு்மானங்களை எடுக்கவேண்டியுள்ளதனால் அசரமாக கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுமாறும் ரணில் விக்ரமசிங்க எம்.பி. கோரியுள்ளார்.

இது தொடர்பில் சஜித் பிரேமதாசவும் சாதகமான கருத்தையே கொண்டுள்ளதாகவும், விரைவில் இருவரும் கலந்துரையாடி அடுத்த வாரத்துக்குள் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன

Leave A Reply

Your email address will not be published.