புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் சாட்சியம் அளிக்கமாட்டேன் – கருணா அதிரடி!

0

விடுதலைப் புலிகள் 600 பொலிசாரைக் கொன்று போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற ஐ.நாவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு ஆதரவாக தான் சாட்சியமளிக்க மாட்டேன் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா தெரிவித்துள்ளார்.

தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் பிரதியமைச்சரிடம்   இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தக் காலத்தில் 600 பொலிஸாரைக் கொன்று விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் புரிந்துள்ளார்களென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விசேட அதிரடிப்படையின் முன்னாள் அதிகாரியான ஜெனட் விமல முறைப்பாடு செய்திருந்தார். இம்முறைப்பாட்டுக்கு சாட்சியாக கருணா ஆஜராவார் என விமல் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ அதிகாரியின் கூற்றை மறுத்த விநாயகமூர்த்தி முரளிதரன்,  அந்தச் சம்பவம் நடைபெறும்போது தான் தலைவர் பிரபாகரனுடன் வன்னியில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.