ஆனந்தி முன் வரிசைக்கு வருவாரா ?

0

கயல் படத்தில் அறிமுமாகி 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆனந்தி.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் ஓரளவுக்கு அவருக்கு பெயரை பெற்றுத் தந்தாலும் இன்னும் ஆனந்தியால் முதல் வரிசைக்கு வரமுடியில்லை.

தற்போது அவர் நடித்து வரும் படமான கமலி பிரம் நடுக்காவேரி அவரை முதல் வரிசைக்கு கொண்டு வரும் என்கிறார்கள்.

ராஜசேகர் துரைசாமி என்ற புதுமுகம் இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஆனந்தியுடன் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தீனதயாளன் இசை அமைத்திருக்கிறார், ஜெகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் ஏப்ரல் 17ந் திகதி வெளிவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.