“உண்மையா இருக்கனுமா ? அப்போ ஊமையா இருக்கனும்“ : இசை வெளியீட்டு விழாவில் விஜய் அசத்தல் பேச்சு!

0

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும் என கூறினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விஜய், “தமிழ் சினிமாவில்  ஒரு தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. அவர்  பெயரில் மட்டும் அல்ல மனசுலையும் இடம் கொடுத்துள்ளார்.

மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது. உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும்” எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.