இளம் நடிகரை தாக்கிய கொரோனா வைரஸ்! புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு

0

உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் சென்றுள்ளது. அதே போல பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மிக வேகமாக பரவக்கூடிய தொற்று நோய் என்பதால் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சிலர் மீண்டு வருகின்றனர். அதே வேளையில் தற்போது இளம் நடிகர் Aaron Tveit தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இது குறித்த பதிவில் அவர் தற்போது அவர் நன்றாக இருப்பதாக உணர்வதாகவும், தனக்கு அறிகுறிகள் எளிதான நிலையிலிருந்தால் தான் அதிர்ஷ்டசாலி எனவும், கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்டதன் முடிவுகள் கடந்த திங்கள் அன்று வெளியானதாகவும், இதில் பாஸிட்டிவ் என இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கடந்த வாரமே தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும், கவனமாக பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள், விரைவில் எல்லோரையும் தியேட்டரில் சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.

பாடகராகவும், நடிகராகவும் இருக்கும் Aaron Tveit, Ghost Town படத்தில் தொடங்கி Girl Walks into a Bar, Les Misérables, Big Sky, Undrafted, Created Equal என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு வயது 36 என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.