கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற ரியலாக களத்தில் குதித்த சூர்யா

0

Suriya Corona Virus Awareness; கொரோனா வைரஸ் (சீனா) vs போதி தர்மன் சூர்யா! வரும் 22 ஆம் தேதி கொரோனா வைரஸ் குறித்து சூர்யா மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் பேஸ்மாஸ்க் கொடுக்க இருக்கிறார்.

மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூர்யா வரும் 22-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

கொரோனாவா என தனக்கென வீட்டுக்குள் முடங்கி விடாமல், வெளியில் வந்து மக்களுக்காக சேவை செய்யும் சூரியா ரியல் வாழ்க்கையிலும் ஹீரோ தானே!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்த படம் 7-ஆம் அறிவு (7aum Arivu). கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

தற்காப்புக் கலை, மருத்துவம், கலைகள் என்று அனைத்திலும் வித்தை தெரிந்தவர் பல்லவ மன்னர் குல இளவரசன் போதி தர்மன் (Bodhidharma).

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு பரவ இருக்கும் கொடிய நோயை ஏழாம் அறிவு என்கிற ஞான திருஷ்ட்டி மூலம் அறிந்துகொள்கிறார்.

சீனா சென்ற போதி தர்மன், கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றுகிறார்.

ஒரு கட்டத்தில் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட அந்த கிராமத்தையே காப்பாற்றுகிறார் போதி தர்மன் (Bodhidharma).

அதன் பிறகு கொள்ளைக் கூட்டத்திலிருந்து தனது தற்காப்பு கலை மூலம் அந்த கிராம மக்களை காப்பாற்றுகிறார்.

அந்த கலையை தங்களுக்கும் கற்றுத் தரச்சொல்லி அந்த கிராம மக்கள் கேட்க, அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். இறுதியில், போதி தர்மனுக்கு விஷ உணவு கொடுத்து அங்கேயே உரமாகிறார்.

இது போதி தர்மனும், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சீனாவின் பழமையான வரலாறு. இந்த உண்மை கதை தான் படமானது. தற்போது இதே நிலைதான் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் உகான் (Corona Virus From Wuhan) மாகாணத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அது இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

இந்த நிலையில், படத்தில் சீனாவைக் காப்பாற்றிய மாதிரி, சென்னையில், கொரோனா வைரஸ் குறித்து தனது விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் மக்களை காப்பாற்ற வருகிறார் போதி தர்மன் சூர்யா.

ஆம், வரும் 22 ஆம் தேதி சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் துண்டுபிரசுரங்கள் மற்றும் பேஸ்மாஸ்க் ஆகியவற்றை கொடுத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவா என தனக்கென வீட்டுக்குள் முடங்கி விடாமல், வெளியில் வந்து மக்களுக்காக சேவை செய்யும் சூரியா ரியல் வாழ்க்கையிலும் ஹீரோ தானே!

Leave A Reply

Your email address will not be published.