“இலங்கையே பாதுகாப்பான நாடு! நாங்கள் வர விரும்புகின்றோம்” ஜனாதிபதிக்கு வந்த கடிதம்

0

பங்களாதேஸில் பணிகளின் நிமித்தம் தங்கியுள்ள இலங்கையர்கள் தம்மை நாடு திரும்ப அனுமதிக்கவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தம்மை பொறுத்தவரை பங்களாதேஸை விட தமது தாய் நாடான இலங்கை பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதாக அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 27 – முதல் 29ஆம் திகதிவரை வார இறுதி விடுமுறை வருவதால் அந்த தினங்களில் தம்மை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் இலங்கைக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை திரும்பவுள்ள பங்களாதேஸில் உள்ள சுமார் 400 முதல் 450 இலங்கையர்கள் நாடு திரும்பியதும் தனிமையாக்கல் கண்காணிப்பு நிலையத்துக்கு செல்ல இணக்கம் தெரிவிப்பதாகவும் அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.