கொரோனாவால் உலகளவில் 31 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ; அமெரிக்காவில் நேற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி !

0

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,136,508 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலக நாடுகள் அதிர்ச்சியிலுள்ளன.

இந்நிலையில் இருதினங்களாக அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்த போதிலும் நேற்றையதினம் 2,470 ஆக அதிகரித்துள்ளது.

இதைவிட ஏனைய உலக நாடுகளில் இறப்பு எண்ணிக்கை கடந்த நாட்களைவிட இறுதியான இரு தினங்களில் குறைந்து காணப்படுகின்றது.

கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 217,813 ஆக உயர்ந்துள்ளடன், கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 953,309 ஆக உள்ளது. மேலும், 19,65,986 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

*அமெரிக்காவில் 10,35,765 பேர் பாதிக்கப்பட்டள்ள நிலையில் அங்கு இதுவரை 59,266 பேர் மரணமடைந்துள்ளனர். இதேவேளை, அங்கு நேற்று மாத்திரம் 2470 பேர் உயிரிழந்துள்ளனர்.

*இத்தாலியில் 201,505 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 27,359 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேற்று மாத்திரம் அங்கு 382 பேர் உயிரிழந்துள்ளனர்.

*ஸ்பெயினில் 232,128 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 23,822 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை அங்கு நேற்று மாத்திரம் 301 பேர் உயிரிழந்துள்ளனர். 

*பிரான்சில் 165, 911 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இதுவரை 23,660 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நேற்று மாத்திரம் அங்கு 367 பேர் உயிரிழந்துள்ளனர்.

*இங்கிலாந்தில் 161,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இதுவரை 21,678 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நேற்று மாத்திரம் அங்கு 586 பேர் உயிரிழந்துள்ளனர்.

*ஜேர்மனியில் 159, 912 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இதுவரை 6,314 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, அங்கு நேற்று மாத்திரம் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.