இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரிப்பு

0

நாட்டில் இன்று (25.04.2020) 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மாத்திரம் கொரோனா தொற்றாளர்களாக, 15 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அதன் படி இலங்கையில், இதுவரை மொத்தமாக 435 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 310 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 118 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கொரோனா தாக்கத்திற்குள்ளான 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.