காதலிக்கு கொரோனா; கழுத்தை நெரித்து கொன்ற காதலன்!

0

இத்தாலியில் தனது காதலிக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அறிந்த காதலன் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதில் கொலை செய்யப்பட்ட பெண் வைத்தியர் என்றும், குறித்த காதலர் ஒரு ஆண் தாதியர் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் கொலை செய்த நபர் பொலிஸாரிடம் கூறியதாவது,

“என் காதலி பெயர் குவாரண்டினா.. வயது 27… அவள் ஒரு வைத்தியர்.. நானும், அவளும் இத்தாலியில் சிசிலி வைத்தியசாலையில் தான் வேலை பார்க்கிறோம்.

13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைத்தியசாலையில் வைரஸ் தாக்கி இறந்துவிட்டனர். நாங்கள் எங்கள் வேலையை சேவையாக நினைத்து செய்தோம்.

ஆனால் குவாரண்டினா, ஒருநாள், தன்னையும் அறியாமல் எனக்கு வைரஸை பரப்பிவிட்டதாக சொன்னாள். இது எனக்கு ஷாக்-ஆக இருந்தது.. ஆத்திரத்தையும் தந்தது.. அதனால்தான் குவாரண்டினாவின் கழுத்தை என் கையாலேயே நெரித்து கொன்றேன்.

கடைசியில் உயிர் போகும் போது அவள் எதையோ சொல்ல வந்தாள்.. ஆனால் விடவில்லை.. அப்படியே கழுத்தை நெரித்தேன்”என்றார்.

இவ்வளவையும் வாக்குமூலமாக சொல்லி முடித்தார் அந்தோனியா.

இதற்கு பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. இதில் அந்தோனி – குவாரண்டினா 2 பேருக்குமே கொரோனா தொற்று இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ரோமில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது..

Leave A Reply

Your email address will not be published.