வேகமாகப் பரவும் கொரோனா! 797 ஆக அதிகரித்தது தொற்று!!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. இந்தத் தொற்றால் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

நேற்று 26 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 797 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்றுக்குள்ளாகியவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 573 நோயாளிகள் 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மேலும் 153 பேர் 29 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.