5000 ரூபா பண உதவி ஜூன் மாதத்தில் வழங்கப்படமாட்டாது! பந்துல குணவர்த்தன

0

கொரோனா நிவாரணமாக கடந்த ஏப்ரலிலும், மே மாதத்திலும் வழங்கப்பட்ட 5000 ரூபா பண உதவி ஜூன் மாதத்தில் வழங்கப்படமாட்டாது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளை அடுத்தே இந்த பணவுதவி வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பணவுதவி செய்யப்படுவது குறித்து அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

எனினும் இந்த நிதியுதவி வாக்குகளை சேகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனவே ஜூன் மாதத்தில் இந்த கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.