மாணவனின் உயிரை காப்பற்ற தனது உயிரை பணயம் வைத்த பொலிஸ் அதிகாரி

0

கண்டி – கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் தற்கொலைக்கு முயன்ற மாணவனின் உயிரை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

காதலிக்கு எழுதிய கடிதம் வீட்டில் சிக்கியமையினால் அச்சமடைந்த மாணவன் மகாவலி கங்கையில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

15 வயதுடைய இந்த மாணவன் கட்டுகஸ்தோட்டை பாலத்தில் நின்று கங்கையில் குதித்துள்ளார்.

இதனை அவதானித்த பொலிஸ் அதிகாரியும் கங்கையில் குறித்து மாணவனை காப்பாற்றியுள்ளார்.

56 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகர் கடமையில் இருந்த போது மாணவனை காப்பாற்றியுள்ளார். மாணவனை காப்பாற்றுவதற்கான தனது உயிரை பற்றி கூட சிந்திக்காமல் எடுத்த நடவடிக்கையை பலரும் பாராட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.