அப்பாவை டெய்லி மிஸ் பண்றேன்..!- அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்ட அதர்வா..!’

0

2010ம் ஆண்டு பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், இந்த 2020ம் ஆண்டில் தற்போது நான்கு படங்களில் நடித்து வருகின்றார். குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்த மற்றும் ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் அதர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இன்று தனது தந்தை முரளிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ”எனக்கு தெரிந்தவரை, ரொம்ப கூலான, அதே சமயம் மிகவும் வலிமையான மனிதர் நீங்கள்தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. உங்களை தினமும் காதலித்து கொண்டும், மிஸ் செய்து கொண்டும் இருக்கிறோம்” என எமோஷனலாக பதிவிட்டுள்ளார். மேலும் இத்துடன் சிறுவயதில் அப்பாவுடன் எடுத்த க்ளாசிக் போட்டோவை அவர் பகிர்ந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.