கொரோனாவால் வறுமை: டி.வி.நடிகர் தற்கொலை

0

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் மன்மீத் கரவேல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் மும்மைபயில் தங்கி இருந்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். ஆதத் சே மஜ்பூர் மற்றும் குல்தீபக் உள்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.

மன்மீத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தன் மனைவி ரவீந்திர கவுருடன் மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மன்மீத் க்ரேவல் மனைவியிடம் தங்கள் எதிர்காலம் குறித்து கண்ணீருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கைக்கு சென்றிருக்கிறார். சற்று நேரத்தில் சத்தம் கேட்டு விழித்த அவரது மனைவி கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறி உள்ளார்.

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலிசிடம் மன்மீத் கரவேலின் மனைவி கூறியிருப்பதாவது: என் கணவர் நடித்த தொடர்கள், வெப் தொடர்கள், விளம்பர படங்கள் கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்தார். அவருக்கு வரவேண்டிய சம்பளமும் வரவில்லை. இதனால் நகைகளை அடகு வைத்து வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து குடும்பதை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அதுவும் கொரோனா பிரச்சனையால் முடியவில்லை.

வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. கடன்காரர்கள் வேறு கடனை கேட்டு தொல்லை கொடுத்தார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் இருந்தார். இப்படி செய்து எங்களை தவிக்க விட்டுச் சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். இந்தி சின்னத்திரை நட்சத்திரங்கள் மன்மீத் கரவேல் குடும்பத்துக்கு நிதி திரட்டி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.