தமிழகத்தில் விமான சேவையை ஆரம்பிக்க வேண்டாம் என வலியுறுத்து!

0

தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி  முதல் விமான சேவையை ஆரம்பிக்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதால் ஜூன் மாதத்திற்கு பிறகு விமான சேவையை  ஆரம்பிக்கலாம் என முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் 25ம் திகதி  முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்காக அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களும் தயாராக இருக்கும்படி அறிவிக்கப்பட்டதுடன், விமான பயண கட்டணங்களையும் நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.