ராஜபக்சர்களின் ஒருங்கிணைந்த முயற்சி விடுதலைப் புலிகளை முழுவதுமாக அழித்துவிட்டது!

0

விடுதலைப் புலிகள் ஒருபோதும் மீள் உருவாக்கம் பெறமுடியாது என அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜபக்சர்களின் நன்கு ஒருங்கிணைந்த மற்றும் நன்கு கவனம் செலுத்திய இராணுவ முயற்சி விடுதலைப் புலிகளை முழுவதுமாக அழித்துவிட்டது.

இந்நிலையில், அந்த அமைப்பினர் மீள வருவார்கள் என்ற எந்தவொரு ஊகமும் அந்த வரலாற்று முயற்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்போதுமே அவருடன் சேர்ந்து, விடுதலை புலிகள் இறக்க வேண்டும் என்று விரும்பினார், அவரும் அவ்வாறே செய்தார் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, சாத்தியப்படாது என கூறிய இரண்டு விடயங்களை ராஜபக்சவினர் சாத்தியப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒன்று விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என்று பலர் நம்பினர். எனினும், அந்த நம்பிக்கையை மாற்றியமைத்தார்.

மற்றையது சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் மிகப்பெரிய வெற்றியை கடந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.