இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் நிலை! வெளியிடப்பட்டுள்ள தகவல்

0

கந்தக்காடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து 428 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த வைரஸ் பரவல் பாரியளவில் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பரவலை பொறுத்தவரை அது தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்துக்குள மாத்திரம் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுளளார்.

இதேவேளை தேசிய புலனாய்வு சேவையினர் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது கொரோனா பரவல் ஏற்பட்டமைக்கான சாட்சியங்கள் தென்படவில்லை.

இந்த நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுகாதார ஒழுங்குவிதிகள் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டபோதும் கடந்த சில வாரங்களாக அதில் சில தளம்பல்கள் இருந்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்தியபோதிலும் சுகாதார ஒழுங்குவிதிகள் உரியவகையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.