எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

0

உலகில் உள்ள எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டை அடக்கி அதிகாரம் செலுத்த நினைத்தால் அதை அமெரிக்க இராணுவம்அனுமதிக்காதெனவும் இந்த விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் எனவும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இது குறித்து அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

உலகின் சக்தி வாய்ந்த இராணுவம் அமெரிக்கா தான் என்பதை உலகிற்கு காட்ட விரும்புகிறோம். அதனால் தான் தென் சீன கடல் பகுதிக்கு எங்கள் போர் விமானங்களை அனுப்பியுள்ளோம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இராணுவத்தை மேலும் பலப்படுத்தவும் சீனாவுக்கு எதிராக சில கடுமையான தடைகளை விதிக்கவும் முடிவு செய்துள்ளார்.

தங்களுக்கு அருகே உள்ள எல்லா நாடுகளையும் ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டுள்ளது.இதனால் அந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவுடன் நட்புறவு வைத்துக் கொள்ள முடிவு செய்து உள்ளன.

இந்திய – சீன பிரச்சினையில் அமெரிக்கா எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே இருக்கும். இந்தியா சீனா இடையேயான பிரச்னையில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியில் பிரச்சினை நடந்தாலும் பலமான நட்புறவின் அடிப்படையில் அமெரிக்க இராணுவம் செயல்படும். எந்த நாடும் மற்றொரு நாட்டை அடக்கி அதிகாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.