கருணாவின் தலையீட்டால் விரட்டப்பட்ட பொதுமக்கள்!

0

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் கருணாவின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று செங்கல்லடிச் சந்தியில், கோவிட் 19 நடைமுறைக்கு அமைய பொலிஸாரின் அனுமதியும் பெற்று, 100 பேருக்கும் குறைவானவர்கள் என்ற நிபந்தனைக்கு ஏற்பவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் பெரும்பாலும் கருணா மற்றும் பிள்ளையான் குழுவினரால் பாதிக்கப்பட்ட தாய்மாரும் உறவுகளுமே கூடி தமது ஆதங்கங்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.

இதை அறிந்த கருணா ஏறாவூர் பொலிஸ் அதிகாரியை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவை வாங்கியுள்ளதாக கூடியிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தடைத்தரவை காட்டி கூடியிருந்த உறவுகளை பொலிஸார் மிரட்டியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகும்படி உத்தரவிட்டுள்ளனர்.

இதேவேளை ஏற்பாட்டாளர்களை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.