கொரோனா நோயுடன் பாடசாலை சென்ற மாணவி – தாய் உட்பட இரு பிள்ளைகளுக்கு தொற்று

0

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்ட அதிகாரி மற்றும் அவரது பிள்ளைகள் இருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசகர் அனுராதபுரம் பிரதேசத்தில் இருந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு முதலாம் திகதி சென்றுள்ள நிலையில் இரண்டாம் திகதி மீண்டும் அனுராதபுரத்தில் உள்ள திஸா வெவ முகாமிற்கு சென்றுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு வந்த அந்த அதிகாரி உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இதனால் முகாமிற்கு செல்லாமல் மீண்டும் ராஜாங்கனயாய 5 பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த அதிகாரியின் உறவினரின் இறுதி சடங்கு நடைபெற்ற ராஜாங்கன 3 இல் அமைந்துள்ள இடத்திற்கு சென்றுள்ளார். மரண வீட்டு சடங்கு 3ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசகர் கலந்து கொண்ட மரண வீட்டு நிகழ்வு மற்றும் தானத்திற்காக கலந்து கொண்ட 230 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய ஆலோசகரின் பிள்ளைகள் இரண்டு பிள்ளைகளும் 11ஆம் மற்றும் ஒன்றரை வயதுடையவர்களாகும்.

11 வயதுடைய பிள்ளை 4, 6 மற்றும் 7ஆம் திகதி பாடசாலைக்கு சென்றுள்ளார். அவரது வகுப்பில் உள்ள மாணவர்கள் 70 பேரை தேடி அவர்களை தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.