சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு – மருத்துவமனையில் அனுமதி

0

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லாவுக்கு (வயது 84) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பித்தப்பை கல் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது. அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் 2012ம் ஆண்டு பதவிக்கு வந்தார். அதற்கு முன்பு இரண்டரை ஆண்டுகள் சவுதி பட்டத்து இளவரசராக இருந்தார். 50 ஆண்டுகளாக ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார்.

தற்போது அங்கு பல்வேறு சீர்திருத்தங்களை அவர் செய்து வருகிறார். மன்னர் உடல்நலம் பெற்றுத் திரும்ப அந்நாட்டு மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.