ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றன.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுடரேற்றப்பட்டது.

யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, அதிகாலை 5 மணியளவில் அங்கு சென்ற ஆயுதாரிகளால் வெளியே அழைக்கப்பட்டு அவரது பெற்றோர் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.