வரகு அன்னாச்சி பழ குழைச்சல்!

0
Pineapple-varaku

வரகு – அன்னாசிப்பழக் குழைச்சல்

தேவையானவை:

வரகு அரிசி. – ஒரு கப்
அன்னாசிப்பழம் – 4 ஸ்லைஸ் (அரைத்து 2 கப் சாறு எடுக்கவும்)
அன்னாசிப்பழத் துண்டுகள் – அரை கப்
வெல்லம் – அரை கப்
சுக்குத்தூள். – அரை டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்

செய்முறை:

குக்கரில் வரகு அரிசியுடன் அன்னாசிப் பழச்சாறு, சர்க்கரை சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். அதை கடாயில் சேர்த்து அதனுடன் சுக்குத்தூள், வேகவைத்த சாதம், அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்துக் கிளறி, அடுப்பை ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

Leave A Reply

Your email address will not be published.