2020 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 20வயதை எட்டிய 2k கிட்ஸ்களின் திருமணங்கள் சமீபகாலமாக இணையத்தில் பேசுபொருளாகவே அமைந்துள்ளது. ஆனால் இந்தாண்டு முதல் 30 வயதை எட்டும் 90s கிட்ஸ்களின் திருமணம் என்னவோ கேள்வி குறியாகவே உள்ளது.
யார் இந்த 90s கிட்ஸ்கள்:
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 60வயது என்பது தற்போதைய நிலை அதில் பாதி அத்தியாயத்தை, அதாவது 30ஆண்டுகளை கடந்துவிட்டாலும் சமூக வலைதளங்களில் தங்களை கிட்ஸ்களே காட்டி கொள்ளும் அவர்கள் 2020 ல் 30வயதை அடைந்து விட்டார்கள்.
நீங்கள் கேட்கலாம் 90ல் பிறந்தவர்களுக்கு மட்டும்தானே பாதி அத்தியாயத்தை கடக்கிறர்கள். நாங்கள் 91, 92, 93 என்று கூற வருவது சரிதான், ஆனால் இங்கு வயதை வைத்து 90s கிட்ஸ்கள் என்று பெயர் வரவில்லை. ஒத்த கருத்துடையவர்களின், வாழ்வியலை ஒத்து போகிற விசயங்களை வைத்தே இங்கு பேசப்படுகிறது.
1980களில் முற்பகுதியில் பிறந்தவர்களும், 2000களில் பிற்பகுதியில் பிறந்தவர்களும் அனுபவிக்காத அதிகமான சந்தோசங்களை, துன்பங்களை அனுபவித்தவர்கள் அனுபவிப்பவர்களே இந்த 90s கிட்ஸ்கள் என்று சொல்லலாம்.
எந்த ஒரு சித்தாந்தங்களும் சரி மனிதர்களும் சரி தன்னை அடுத்த தலைமுறைக்கு தகுந்தவாறு தகவமைத்து கொள்ளாவிட்டால் கால ஓட்டத்தில் தோற்கும் என்பதுதான் நிசர்சன்மான உண்மை.
பொதுவாக ஒரு மிகப்பெரிய சர்ச்சை ஒன்று உள்ளது. யார் இந்த 90s கிட்ஸ்கள் என்று? நம் முன்னோர்கள் நம்மிடம் கூறுவார்களே ’நாங்களாம் அந்த காலத்துல’ என்று? அதே போல்தான் 80கடைசி மற்றும் 90ஆரம்பத்தில் பிறந்தவர்கள் சந்தித்த வாழ்வியலான நிகழ்வுகள் ஒத்துப்போகும் அனைவருமே 90s கிட்ஸ்கள்தான்.
1988,89,90,91,92,93,94,95,96 இந்த காலகட்டத்தில் பிறந்தவர்களின் ஒப்பிடுதல், கருத்தியல், WaveLength ஒன்றாக Sync ஆகும். சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறிய Promo காட்சி ஒன்று காட்டப்படும். அதில் காட்டப்படும் பழைய விசயங்கள் உங்கள் வாழ்வியலோடு 100% ஒத்துப்போனால் நீங்களும் 90sகிட்ஸ்களே…
97,98,99 களில் பிறந்தவர்கள் 90s கிட்ஸ்கள் வரிசையில் வரமாட்டார்களா என்று கேட்கலாம் கண்டிப்பாக வரமாட்டார்கள்
90s கிட்ஸ்களின் சவால்கள்:
பொதுவாக 90 கிட்ஸ்கள் பள்ளிப்படிப்பை முடிக்கின்ற தருவாயில் தமிழகத்தில் Engineering படிப்பு மிகப்பிரபலமாக பேசப்பட்டது. அதுபோக நுழைவுத்தேர்வு 2006 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி படங்கள் ரிலீசான தருணம் அது, ’மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்ற வசனம் போல ’படிச்சா Engineering தான்டா’ என்று சேர்ந்தார்கள்.
பிற்பகுதியில் நிகழ்ந்ததோ வேறு, வருடத்திற்கு 40,000 என்ற பொறியியல் பட்டதாரிகள் எண்ணிக்கை லட்சக்கணக்காக மாறியது. வேலை என்பது எட்டாகனியா மாறிவிட்டது. இதிலும் கூட M1,M2,M3,DSP,PQT என அரியர்ஸ் என 4 ஆண்டு படிப்பை 8 ஆண்டுகள் படிப்பதிலே பாதி காலம் ஓட்டிவிட்டார்கள் . கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நிலமை கொஞ்சம் சிரமம்தான், எங்கே நேர்காணலுக்கு அவர்கள் சென்றாலும் அவர்களுக்கு போட்டியாக 4 Engineering பட்டதாரிகள் உட்கார்ந்திருப்பார்கள்.
இவர்கள் இந்த Task யை முடிப்பதற்குள் காதலித்த பெண்ணுக்கும் வேறு இடத்தில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆக Carrier, Life ம் சரி இதற்கிடையில் பொருளாதாரம் பிரசச்னைகள் வேறு ( குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே) Success ஆக வாழ்க்கையை நகர்த்தி செல்பவர்களும் உண்டுதான். பொதுவாக அதிக நடைமுறை சிக்கல்களை பள்ளி நாட்கள் முதலே சந்தித்து வருபவர்கள்.
90களில் பெண் பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் நடைமுறை கூட இருந்தது. அதற்குதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொட்டில் குழந்தைகள் திட்டத்தை கூட அமல்படுத்தினார். அது கூட 90s கிட்ஸ்களுக்கு பெண் கிடைக்காததற்கான காரணம் என்று கூட சிலர் கூறுகின்றனர்.
திருமணம் மட்டும்தான் வாழ்க்கையா? என்று கேட்டால் நிச்சயம் கிடையாதுதான் ஆனால் சமூக கட்டமைப்பு சொல்லி கொடுத்ததோ வேறு திருமணத்தால் மட்டும்தான் ஒரு மனிதன் முழுமையடைகிறான் என்ற கருத்தை முன்வைக்கும்போது, இங்கு திருமணம் பெரிதாக பேசப்படுகிறது.
2k கிட்ஸ்கள்:
வாழ்கையை புரிந்தவர்கள், வாழ கற்றுக்கொண்டர்வர்கள், இப்படிதான் வாழணும் என்ற வரையறையை எல்லாம் கிடையாது , மிகவும் முற்போக்கான மனிதர்கள். ஏதோ ஒரு படிப்பு வாழ்க்கைக்கு, ஆனால் அந்த படிப்புதான் நம் தலையெழுத்தை தீர்மானிக்க போகிறது என்று நம்பாதவர்கள். Engineering யை முற்றிலும் புறம்தள்ளிட்டு ’டக்கு டக்கு’னு 19 வயதில் டிகிரி- 20 வயதில் திருமணம் என 90s கிட்ஸ்களை தூக்கி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.
சாதி ஒழிப்பு திருமணத்தில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது என்று கூட சொல்லலாம். ‘வரலாம் வா நா இருக்கேன் மச்சானு’ அவர்களின் வாழ்க்கையே வேறு உலகம்..
90s கிட்ஸ்கள் : உலகம் ரொம்ப பெருசு வாழவேண்டியது இன்னும் நிறைய இருக்குனு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்….
2k கிட்ஸ்கள் : உலகம் ரொம்ப சிறியது வாழவேண்டியது சீக்கிரமாக வாழணும்னு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்…
குறிப்பு: இது அனைவரது வாழ்வியலோடும் பொருந்தாது குறிப்பிட்ட சிலருக்கே..